நானும் ஹிந்தியும்
என் தாய்மொழி தமிழ். நான் அறிந்தவரை தலை தலைமுறையாக நாங்கள் -அதாவது எங்கள் குடும்பத்தினர் பேசி, புழங்கி வருவது தமிழ் தான். இதை நான் ஒரு பெருமையாகக் குறிப்பிடவில்லை. அப்படி நேர்ந்தது. அவ்வளவே
நான் முதலில் எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொண்ட மொழி ஹிந்தி தான்.நான் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும்போதே ஹிந்தி கற்றேன். ஐந்துக்கு வருவதற்குள் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் வந்து என் ஹிந்தி படிப்பு தடைப்பட்டது.
மீண்டும் எஸ்.எஸ்.எல்.சி.முடித்ததும் காங்கிரஸ் சார்பும் தேசீய உணர்வும் கொண்ட காலஞ்சென்ற எனது நண்பன் வா.சீ .வேங்கடாசலம் மூலம் உருது முன்ஷி ஒருவரிடம் பிராத்மிக் டியூஷன் படிக்கச் சென்றேன்.அன்று தொடங்கியது ஹிந்தி மீது எனது காதல்.தணியாத காதல்.மாறாத நேசம்.
அதன் விளைவாய் நான் கற்றதை,பெற்றதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
No comments:
Post a Comment